Tuesday, May 4, 2010

அவள் அப்படி ஒன்றும் அழகில்லை

உச்சி வெயிலின்
உக்கிரம் தணிக்க
உறைவிடம் தேடி
ஊர்ந்தன கண்கள்

பேருந்து நிறுத்தமும்
பேய்கிளை மரமொன்ரும்
பெற்றெடுத்த நிழலில்
இப்பொது நான்

கதிரவன் கோபத்திற்கு தப்பி
காற்று தந்த சுகத்தில் கனவுலகில் நான்.......
காசுகள் சிதறும் சத்தம் கேட்டு
கண்விழித்து பார்த்தேன்

என் காலடியில் காசுகள்
எடுத்து கொண்டிருந்தாள் ஒருத்தி
ஒன்றிரண்டிற்கு நானும் உதவினேன் ........

நேர் வகிடின் அடி முகர்ந்த
நெற்றியை விரித்து சொன்னாள்
"thanks"

(அவளை) எங்கேயோ பார்த்ததுபோல்
ஏதேதோ நியாபகங்கள்
யோசித்து பார்த்த என் மூளை
முதல் முறையாக தோற்று போனது

தென்றலின் வருடலில்
நெற்றி தொட்ட கூந்தலை
நேராக்கி சென்றாள்
நேரான என் மனது
நேர்த்திகடா போலானது

தோழிகள் கூட்டத்தை இவள்
தொட்டதும் ஆயிரம் சிரிப்புகள் அங்கே
சிங்கபல் காட்டி சிரிக்கின்ற அவளிடம்
சிதறி கிடந்தது என் மனம்

(அவள்) கன்னக் குழியிரண்டில்
கரைந்து கொண்டிருந்தேன் (நான்)

நான் என்னும் சுயம் தொலைத்து
அவள் என்னும் ஆயுத தாக்குதலில் தடுமாறி
நாம் என்னும் நிகழ்வை தேடி மனம் ..................

வந்த வழியிலேயே
வாய் பேசி செல்கின்றது அந்த கூட்டம்
வாய் பேசும் வழி மறந்து
வந்த வழியும் மறந்து
என் பேச்சு கேளாமல் அவள் பின்னே என் மனம்

நேர் கோட்டில் இருக்கும்
சந்திரனை கண் சிமிட்டி பார்க்கும்
நட்சத்திரம் போலே
முகம் மட்டும் என்பக்கம் காட்டி
முகர்ந்து பார்த்த பூவாய்
முகம் நாணி கண் பார்த்தாள்

இதுவரை
அவனாய் நின்றிருந்த நான்
அதுவாகி கிடக்கிறேன்
அக்றிணை கூடத்தில்
உடலோடு ஒருவனாய்...................

அவள் அப்படி ஒன்றும் அழகில்லை
ஆனால்
அவள் போல் அழகி யாருமில்லை

சிரிப்பு

காலணா செலவு இல்லை கடை வீதியில் கிடைப்பதில்லை ! உலகத்து உயிர்களிலே ஒரே ஒரு மிருகம் கற்ற வித்தை ! உயிர் இலா ஊணிலே ஒளிந்து கூட இருப்பதில...