அண்ணாச்சி கடைகளெல்லாம் அலுத்துவிட்டது
நான் கேட்டது மட்டுமே கொடுக்கிறார்
அவர் கொடுத்தது மட்டுமே பெறுகிறேன்
பச்சையும் மஞ்சளும் கலந்த மிட்டாய் பக்கத்து வீட்டு பையன் சாப்பிட்டது
என் தெரு கடையில் கிடைகல
வாங்குகின்ற அரிசியில் வகை வகைவகையாய் வண்டுகள்
வாய் நிறைய சொல்லுகிறார் காரணங்கள்
நிர்ணய விலையில் எந்த குறைவும் கொடுப்பது இல்லை
வருடத்திற்கு ஒரு முறை நாள்காட்டி கொடுப்பதோடு முடிகிறது
அவரது வியாபார யுக்திகள்
அவருக்கும் எனக்குமான பந்தங்கள் இதோடு முடிவதில்லை
என் அண்டைவீட்டார், மகனோடு படிக்கிறான் அவர் மகன், என் வீட்டு நல்லது கெட்டதில் பங்கெடுக்கிறார்
எனக்கு தேவையானது மட்டுமே விற்கிறார் இப்படியாக நீள்கிறது
என் மண்ணில் விளைந்ததை விற்கிறார், வேலை கேட்டு சோம்பல் விடுவதில்லை, இலவசம் கேட்டு போராடுவதில்லை
நாட்டின் பொருளாதாரத்தில் மறுக்க முடியா அங்கமென நீள்கிறது அவருக்கும் இந்த நாட்டிற்குமான தொடர்பு
இவரை எங்களுக்கு அந்நியப்படுத்த ஆயத்தமாகிறது அரசு
வால்மார்ட்டில் எல்லாம் கிடைக்குமாம் , அடிமைகளும் கிடைப்பார்களாம் ...........
வணக்கம்...
ReplyDeleteவலைச்சரம் மூலம் உங்கள் தளம் வருகை... Followers ஆகி விட்டேன்... தொடர்கிறேன்...
வலைச்சரத்தில் உங்கள் தளம் அறிமுகப்படுத்தியுள்ளது... Visit : http://blogintamil.blogspot.in/2013/06/blog-post_5830.html
அறிமுகத்தில் சிவகாசி நண்பர் சொன்னது சரியாகத்தான் உள்ளது...
தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்... நன்றி...
Nanri Dhanabalan
Deleteவலைச்சரம் மூலம் முதல் வருகை.வாழ்த்துகள்..
ReplyDeleteவலைச்சரம் வருகைக்கு வாழ்த்துக்கள்
ReplyDelete