செம்மொழியான தமிழ் மொழியாம்
-------------------------------
கல் தோன்றி முள் தோன்றா காலத்தே என்றெல்லாம் சொல்லப்பட்ட தமிழ் மொழிக்கு ஒரு விழா என்பது சற்றே உகந்த ஒன்றாகதான் தெரிகிறது. நான் இங்கே இந்த செமொழி மாநாடு நடத்தப்படும் அவசியத்தையோ இது கட்சி மாநாடா அல்லது கழக மாநாடா என்றோ இங்கே தமிழ் தான் விவாத பொருளா என்பது பற்றியோ விவாதிக்க விழையவில்லை. என கட்டுரையின் சாரம் அந்த சிறப்பு பாடலை மயமாக கொண்டே செல்லும். இதிலும் இந்த பாடலின் பொருளில் குற்றம் கண்டுபிடிக்க விழையவில்லை. காரணம் நான் அவ்வளவு பெரிய தமிழ் அறிஞர் இல்லை என்பது இல்லை, அந்த பாடலின் வரிகள் என காதிலே விழவே இல்லை என்பதுதான். என அறிவுக்கு ஏறிய அல்லது எட்டிய சில கருத்துகளை நான் இங்கே பகிர்ந்து கொள்ள விழைகிறேன்.
"செம்மொழியான தமிழ்மொழியே" என்ற பாடலில் தமிழின் முழு சிறப்பும் அடங்கி இருக்கிறதா என்பது பற்றி விவாதிக்க தேவை இல்லை. ஏனென்றால் அது அவ்வளவு எளிதான காரியம் இல்லை. எனிவே அதை இப்போதைக்கு ஓரம் கட்டுவோம்.இந்த பாடல் கருவாக்க பட்ட விதம் தான் சற்றே நெருடுகிறது.
௧) முதலில் தமிழ் பாடல்கள் என்பது (என நாட்டுப்புற பாடல்களானாலும் பின்பு வந்த கர்நாடக சங்கீதம் ஆனாலும்) இசையை காட்டிலும் வார்த்தைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வார்க பட்டவை வார்த்தைகளே காதில் விழாத மேற்கத்திய கலாச்சாரத்தை தாங்கிய பாடலை பிரதானமாக கொள்வது புரியவில்லை.
௨) பறை, உடுக்கை, தப்பு, தவில் போன்ற தமிழனின் வாத்தியங்கள் எதுவும் இப்பாடலில் பெரிய இடம் பிடிகக்வில்லை என்பது சற்றே நெருடுகிறது.
௩) தமிழுக்கே உரிய வீர விளையாட்டுகளான சிலம்பம், மல்யுத்தம் போன்றவைகளும் காணோம்
௪) எம் தமிழ் மங்கையர் விளையாடும் அம்மானை, பாண்டி, பல்லாங்குழி, சோவி, தாயம், சொக்கட்டான் போன்ற எதையும் காணோம்.
௫) இங்கே தமிழ் மன்னர்கள் கட்டி வைத்த எந்த ஒரு சிற்ப கோயிலும் இல்லை. கடாரம் வென்றவனும், இலங்கை வென்றவனும், இந்தோனேசியா சென்று கோடி நாட்டியவனும் ஒரு வேலை தமிழன் இல்லையோ என்ற ஐயம் எழுகிறது.
௬) என பத்தினி தெய்வம் கண்ணகியையும் காணோம், தன்னில் ஒருவனாய் தெய்வமாய் கும்பிட்ட கருப்பனும், முனியனும் காற்றிலே போனார்கள் போலும்.
௭) தமிழனின் போர் முறைகளான ஈட்டி எறிதல், கவன எறிதல், விற்போர், மற்போர் எதுவும் காணோம்.
௮) வைகை, காவிரி, தென்பெண்ணை, பாலாறு அவை எமக்கு கொடுத்த எழில்மிகு வயல் வெளிகள் எதுவும் காணோம்.
௯) ஏர் பூட்டி உலழும் உழவன் காணோம், எழிலார்ந்த ஓவியங்கள் எதையும் காணோம் , வனப்பான தமிழச்சியை வரியில் காணோம், வரிபுலியை முறத்தால் துரத்தியவலை, தான் கார்சிலம்புகாய் நகர் எரித்தவளை, நட்பின் இலக்கணம் பிசிரந்தயாரை, புலி கொடி, மீன் கொடி இன்னும் பல எங்கே என்று இன்னும் தேடுகிறேன்.
௧௦) அட பாரதியும், பாரதிதாசன் கூடவா மறப்பீர்கள்.
௧௧) OSCAR விருதை ஒரு தமிழன் வாங்கினான் என்பதும் அவனை பெருமை படுத்தும் விதமாக இந்த பாடல் வழங்கபட்டது என்பது மகிழ்ச்சியான செய்தி என்றாலும் அந்த தமிழன் தமிழ் பாரம்பரியத்தை நிலை நாட்டி எந்த விருதும் வாங்கவில்லை. மேற்கத்திய இசையை பறை சாற்றியே அந்த விருது வழங்க பட்டது. கணினி துணை கொண்டு பத்து பதினைந்து பாடல்களை கலந்து கொடுக்கும் ஒருவனை இந்த தமிழ் சமுதாயம் என்றைக்குமே இசை கலைஞராக ஏற்காது.
௧௨) மேலும் இந்த பாடலின் இயக்கம் ஒரு மலையாள மன்னிக்கவும் சேர நாட்டு தமிழனுக்கு வழங்க பட்டது இன்னொரு அபத்தம். ஏதோ ஒரு மேற்கத்திய ஆல்பம் போலே அமைக்க பட்டிருப்பது என்பது மிகவும் வருந்ததக்கது.
௧௩) இந்த "கம்பனாட்டாழ்வனும்" என்ற வார்த்தைக்கு ஒரு ஆட்டம் காண்பித்தார்கள். பாவிகளா 14000 பாடல்களை பாடிய ஒரு தமிழனுக்கு கொடுக்கும் மரியாதை இதுதானா.
மெல்ல தமிழ் இனி சாகும்
மேற்கு மொழிகள் நம்மை ஆளும்
பாரதி ஒரு தீர்க்கதரிசி
Thursday, June 24, 2010
Subscribe to:
Posts (Atom)
சிரிப்பு
காலணா செலவு இல்லை கடை வீதியில் கிடைப்பதில்லை ! உலகத்து உயிர்களிலே ஒரே ஒரு மிருகம் கற்ற வித்தை ! உயிர் இலா ஊணிலே ஒளிந்து கூட இருப்பதில...
-
செம்மொழியான தமிழ் மொழியாம் ------------------------------- கல் தோன்றி முள் தோன்றா காலத்தே என்றெல்லாம் சொல்லப்பட்ட தமிழ் மொழிக்கு ஒரு விழா ...
-
அண்ணாச்சி கடைகளெல்லாம் அலுத்துவிட்டது நான் கேட்டது மட்டுமே கொடுக்கிறார் அவர் கொடுத்தது மட்டுமே பெறுகிறேன் பச்சையும் மஞ்சளும் கலந்த மிட்...
-
Last week I came from office late night which would be around 9 in the evening.I feel very tired and so i decided to walk directly to my roo...