Wednesday, June 1, 2011

அழகர்சாமியின் குதிரை

வானம் பார்க்க போய் நானும் என் நண்பர்களும் இதில் மாட்டிகொண்டோம். எப்படியும் 2 மணி நேரம் வெளியில் வர முடியாது என்பதால் வேறு வழி இல்லை. இதுல நண்பன் வேற கூட்டிட்டு வந்ததுக்கு ரொம்ப canvass பண்ணினாரு. ரொம்ப நாளைக்கு அப்புறம் ஒரு நல்ல படம் பார்த்த திருப்தியோடு வந்ததற்கு நண்பனுக்கு நன்றிகள்.

திருவிழா பூண்ட கிராமத்தின் அழகு, நெல்லு குத்தும் பெண்கள், திருவிழாவில் வரும் பங்காளி சண்டைகள், திருவிழா அப்போ ஊரில் ஒவ்வொருவரின் பங்களிப்பு, வசூல் பண்ண முடியாமல் திணறும் பெரிசுகள் என ஏகத்துக்கும் கிராமாந்திரம் தான். இதற்க்கு நடுவே பூக்கும் காதல் அரும்புகள், கலாய்புகள் என கொஞ்சம் குதூகலமாகவே போகிறது கதை. பாரதிராஜாவிற்கு பிறகு கொஞ்சம் கிராமத்தை நம் கண் முன்னால் காட்டி இருக்கிறார்கள். செயற்கையான மதுரை தமிழ் இல்லாது இருந்தது இன்னொரு சிறப்பு.

கோடங்கி அடிக்கும் ஊர் பூசாரியை பார்த்து "இவர் என்ன பண்றாரு" என்று கேட்ட நண்பனை பார்த்து திடுக்கிட்டேன். நகரத்தின் தாக்கத்தில் நிலை குலைந்து போன நம் கலாச்சாரம் மற்றும் சடங்குகள் கண் முன்னே நிழழாடின. ஒரு பொம்ம குதுர செஞ்சு வெக்க எவ்வளவு நாள் ஆகும் என்பதாய் நீண்டது அவர்கள் விவாதம். கிராமங்களின் பண புழக்கம் மற்றும் அவர்களின் மன நிலை, இவற்றை நகரத்து மக்களிடம் மறைத்து விட்டோம் என்பதும் தெரிந்தது. Reliance Fresh , More , Mega mart , என விரிந்து கிடக்கும் அக்டோபஸ் கூட்டம் இவர்களிடம் உறிஞ்சுவதை கூட அறியாதவர்கள் அடுத்தவன் வாழ்கையை அறிவனா என்பது சந்தேகமே.

வன்முறை, ஆபாசம் இல்லாத படங்களே நம்மை சிந்திக்க வைக்கின்றன. கண்டிப்பாக இதற்கு தேசிய விருது கிடைக்காது. நல்ல படம் என்பதற்கு இது ஒன்றே சான்று.

சிரிப்பு

காலணா செலவு இல்லை கடை வீதியில் கிடைப்பதில்லை ! உலகத்து உயிர்களிலே ஒரே ஒரு மிருகம் கற்ற வித்தை ! உயிர் இலா ஊணிலே ஒளிந்து கூட இருப்பதில...