Tuesday, September 11, 2018

சிரிப்பு

காலணா செலவு இல்லை
கடை வீதியில் கிடைப்பதில்லை !
உலகத்து உயிர்களிலே
ஒரே ஒரு மிருகம்
கற்ற வித்தை !
உயிர் இலா ஊணிலே
ஒளிந்து கூட இருப்பதில்லை !
பணமிருந்தும் மனமில்லா
மாந்தருக்கு மறைபொருள்தான் !
தனியாக அனுபவித்தால்
தரணியில் தனிப்பேர் உண்டு !
குவிந்து இருக்கும் இதழ்களில்
கூடாத அதற்கு
சூழ்ந்து நிற்கும் சொந்தங்களில்
சிதறி கிடைக்கும் சிரிப்பு என்று பெயர் 

Monday, July 23, 2018

புத்தக பயணம்

நதிக்கரை ஓரத்து கதைசொல்லி
நழுவவிட்ட புத்தகம்
முதல் பக்க முகங்களின் முகவுரைக்கும்
கடைசி பக்க முகவரிக்கும்
நடுவிலே ஒரு பயணம்
நடுப்பக்கம் .....
முதல் பக்கம் பெற்றெடுத்த
முகங்களை
நடுப்பக்கங்களே
நாயகர்களாக்குகின்றன!
கதை சொல்லாமலே
கடந்து செல்கின்றன சில பக்கங்கள் !
இரவின் வானம்
இட்டு  நிரப்பிய தூரிகைகளாய்
எத்துணை கதாபாத்திரங்கள் !
சில வரிகளின்
உயிர்கள் என்னவோ
சிதைந்த தூரிகைகளில் தஞ்சமடைந்தன
கடைசி பக்கம் .....
நடுப்பக்க நளினமெல்லாம்
நமக்கே மறந்து போகும்
கடைசி பக்கங்கள்
கட்டவிழ்த்துவிடும் கதை வரிகளில் .....
கடைசி பக்கத்தின் கருத்தரிப்பில்
தொலைந்தேபோயின
முதல் பக்கம் சொல்ல வந்த முகவரிகள் !
'முற்றும்'
என்பதை நிரப்பாமலே
கடந்து போகின்றன சில கதை வரிகள்.. இல்லை கதைகள் ..

சிரிப்பு

காலணா செலவு இல்லை கடை வீதியில் கிடைப்பதில்லை ! உலகத்து உயிர்களிலே ஒரே ஒரு மிருகம் கற்ற வித்தை ! உயிர் இலா ஊணிலே ஒளிந்து கூட இருப்பதில...