Sunday, February 28, 2010

கனவு

மாற்று கோணம் - கனவு
------------------------
கனவு என்னும் வார்த்தை தூக்கத்தில் வருகின்ற கனவை குரிபதற்கே உருவானது என்றாலும் பெரும்பாலான நேரங்களில் நம்முடைய தொலைந்து போன வாழ்க்கை தடங்களை குறிபதற்கே பயன்படுகிறது .நாம் தூக்கத்தின் போது வரும் கனவுகளை பற்றியே இங்கே பேச முயற்சிப்போம் .ஏனென்றால் வாழ்க்கை கனவுகள் மனிதர்களிடையே வேறுபடும் அல்லது ரகசியம் காக்கப்படும் .கனவுகள் என்பதின் மூல வார்த்தை எந்த மொழியை சேர்ந்தது என்பது இப்போதைக்கு தேவை இல்லாத வாதம் என்றே நான் நினைக்கிறன் .நானுன் என் நண்பனும் கல்லூரி நாட்களில் கனவு 2D யா அல்லது 3D யா என்பன போன்ற சர்ச்சைகளில் ஈடுபடிருகிறோம்.இது கொஞ்சம் நண்பர்களிடையே பல விதமான யோசனைகளை தூண்டியது என்பதில் எந்த சந்தேகமும் வந்திருக்காது .(நாம் சினிமா தியேட்டரில் அமர்துல்லோமேன்றல் நாம் கண்முன்னே திரையில் ஓடுவது 2D என்றும் நாம் மற்றும் நம்மை சுற்றி இருப்போரை நாம் உணர்வது 3D என்றும் கொள்ள வேண்டும் ), இப்போது எங்கள் சர்ச்சை உங்களுக்கு புரிந்திருக்கும் . கனவிலே நாம் நடப்பதை தனியாக உணர்கிறோம அல்லது நாமும் பங்கு பெருகிறோம என்பதே எங்க கேள்வி .சரி இதற்கு விடை காணும் முன்பே என் நண்பனிடமிருந்து இன்னொரு கேள்வி எழுந்தது .கனவுகளில் நாம் காணும் காட்சிகளின் நிறங்கள் (கலர் ) உண்மையா அல்லது இந்த பொருள் இந்த கலர் என்று நாம் நினைத்து கொண்டு கனவு காண்கிறோம என்பதே அது .( அவனுடைய கேள்வி : கனவுகள் கலரா ? black & white?) இது போன்ற சர்ச்சைகள் நிறைய இடங்களில் போய் கொண்டு இருக்கிறது என்றாலும் இதற்கு இது தான் விடை என்று சொல்ல முடியாத ஒரு விக்யான கேள்விகள் தான் இவை .கனவுகள் பலிப்பதுண்டா அல்லது தொடர்வது உண்டா என்றும் கூட சிலர் சிந்திபதுண்டு .ஏன் நமக்கு கனவுகளின் மேல்
இவ்வளவு எதிர்பார்ப்புகள் ? நம்மை போன்ற ஒரு உருவம் நம் அருகில் நாம் செய்ய துடிக்கும் ஒரு காரியத்தை அனாயசமாக செய்யும் போது அது நமக்கு
எதிர்பார்ப்பை உண்டு செய்வது இயற்கை தானே ! என் இனொரு நண்பன் தன்னுடைய ப்லோகிலே கனவுகளை பற்றி குறிப்பிடும் போது நாம் இன்று நிஜத்திலே செய்கின்ற காரியங்கள் எல்லாம் கனவு இல்லை என்பதை எப்படி கண்டு பிடிப்பது ? நாம் கில்லி பார்க்கலாம் ஆனால் அதுவும் கனவில் நடக்கும்? ஏதாவதொரு சுவற்றில் எழுதி வைக்கலாம் .அதுவும் கனவானால் ? இப்படியே போனால் என்ன ஆகும் ? ஒரு வேலை நானும் யாரோ ஒரு காணும் கதாபாதிரமாஹா இருப்பேனோ ? என்பதஹா அந்த கட்டுரை நீள்கிறது .இது தொடர்பாக பல்வேறு இங்கிலீஷ் திரை படங்கள் எடுக்கப்பட்டு விட்டன என்றாலும் நாம் ஒருவரின் கனவுலகின் கதாபாதிரமாக இருந்தால் நிறைய சாதிகளாம என்றே தோன்றுகிறது .

Note: என்னுடைய இந்த கட்டுரைகளில் பெரிய மேதைகளின் அடிகோள்கள் குறைவாஹவும் நம் போன்ற சாதாரண மக்களின் கருத்துகள் அதிகமாகவும் வரும்படி
எழுதுவதாக நினைதிருகிறேன்

No comments:

Post a Comment

சிரிப்பு

காலணா செலவு இல்லை கடை வீதியில் கிடைப்பதில்லை ! உலகத்து உயிர்களிலே ஒரே ஒரு மிருகம் கற்ற வித்தை ! உயிர் இலா ஊணிலே ஒளிந்து கூட இருப்பதில...