Monday, March 16, 2009

கற்று கொடுங்கள்

கவிதை எழுத வேண்டும் நான்

கற்று கொடுங்கள்

காற்று வாங்க சென்றவன்

கவிதை வாங்கி விட்டான்

கவிதை வேண்டி வந்தவன்

கலக்கத்தில் இருக்கிறேன்

இரண்டு முறை சொன்னால்

கவிதை ஆகுமாம்

இரண்டு முறை எதை சொல்வது

தெரிந்தால் சொல்லுங்கள்

இயர்கைஐ ரசித்தால்இயலும் என்கிறார்கள்

இலைகளின் நடுவில்

இழைந்து ஓடும் நரம்புகளில்

காற்று வாசிக்கும்கவிதை ! காணாமல் போனேன் நான்சமூகம்

உனக்கு சொல்லி தரும் என்றர்கள்

சமூகம் சற்றே தள்ளி இருக்க சொன்னது

காதலித்து பார் கவிதை வரும் என்றார்கள்காதலிக்க

கற்று கொள்வது கவிதையை விட கடினமானது

இயற்கையின் எழுத்துகளிலும்

வாழ்கையின் வசந்தங்களிலும்

வாழ்விலா மாந்தரின் வறுமையிலும்

நிலவின் ஒளியில் நிழலாய் நிற்கும்

எனக்குகற்று கொடுங்கள் கவிதை எழுத

1 comment:

  1. //காதலித்து பார் கவிதை வரும் என்றார்கள்
    காதலிக்க கற்று கொள்வது
    கவிதையை விட கடினமானது//

    ரசிச்சு எழுதியிருப்பிங்க போலயே!!! ரொம்ப கஷ்டமா இருக்கோ காதல் பன்றது?

    எப்டியோ ப்ளாக் ஆரம்பிச்சிட்டோம், இனி பட்டய கெளப்ப வேண்டியது தான் பாக்கி...

    ReplyDelete

சிரிப்பு

காலணா செலவு இல்லை கடை வீதியில் கிடைப்பதில்லை ! உலகத்து உயிர்களிலே ஒரே ஒரு மிருகம் கற்ற வித்தை ! உயிர் இலா ஊணிலே ஒளிந்து கூட இருப்பதில...