Friday, May 8, 2009

வேலைநிறுத்தம்

வேகாத வெயிலு சாமி வேத்து வடியிர தேகம் சாமி வாய் நிரம்ப பேசினாலும் வயிறு நிரம்பா வாழ்கை சாமி பசிகாம சோறு தின்னு பக்கத்துக்கும் படுத்து உருண்டு வேண்டாத கதை பேசி வேடிகக பாக்குற வாழ்கை இல்ல.........பள்ளிகூட வாசல்ல பழம் காய் வித்தா தான் பசியாருற வயிறு சாமி அஞ்சாறு புள்ள பெத்தும்அன்னாடம் காச்சி சாமி அடுத்த வீட்டு அஞ்சனைக்கு பேறுகாலம் நெருங்கிருச்சு அஞ்சாறு காசு சேத்துஅவசரத்துக்கு வெச்சிருக்கா அவ ஆத்தா எதுத்த வீட்டு பிள்ளைக ராவெல்லாம் படிக்குதுக ஏதேதோ பேசுதுக பரிட்சேன்னு புரியுது அஞ்சனையின் முனகலும் அணையாத விளக்கும் ராவெல்லாம் தூக்கமில்ல ராகம் பாடும் கொசுக்கும் கூட!விடிஞ்சதும் எந்திரிச்சாகடை அடபுன்னு காதோரம் சொல்லுதுக இலங்கையில ஏதோ போருன்னு சொன்னாக பட்டினி போர் எனகொன்னும் புதுசில்ல சாமி !கத கதன்னு வெயிலு உச்சி தொட்டு பாக்கும் போது என் கடக்குட்டி கேப்பாலே"அப்பா பசிக்குது " என்ன சொல்லி புரிய வெப்பேன் விடிஞ்சும் விடியாத என் வாழ்கைவேலைநிறுத்தம், இலங்கை தமிழர் எல்லாத்தையும்?

சிரிப்பு

காலணா செலவு இல்லை கடை வீதியில் கிடைப்பதில்லை ! உலகத்து உயிர்களிலே ஒரே ஒரு மிருகம் கற்ற வித்தை ! உயிர் இலா ஊணிலே ஒளிந்து கூட இருப்பதில...