Tuesday, September 11, 2018

சிரிப்பு

காலணா செலவு இல்லை
கடை வீதியில் கிடைப்பதில்லை !
உலகத்து உயிர்களிலே
ஒரே ஒரு மிருகம்
கற்ற வித்தை !
உயிர் இலா ஊணிலே
ஒளிந்து கூட இருப்பதில்லை !
பணமிருந்தும் மனமில்லா
மாந்தருக்கு மறைபொருள்தான் !
தனியாக அனுபவித்தால்
தரணியில் தனிப்பேர் உண்டு !
குவிந்து இருக்கும் இதழ்களில்
கூடாத அதற்கு
சூழ்ந்து நிற்கும் சொந்தங்களில்
சிதறி கிடைக்கும் சிரிப்பு என்று பெயர் 

Monday, July 23, 2018

புத்தக பயணம்

நதிக்கரை ஓரத்து கதைசொல்லி
நழுவவிட்ட புத்தகம்
முதல் பக்க முகங்களின் முகவுரைக்கும்
கடைசி பக்க முகவரிக்கும்
நடுவிலே ஒரு பயணம்
நடுப்பக்கம் .....
முதல் பக்கம் பெற்றெடுத்த
முகங்களை
நடுப்பக்கங்களே
நாயகர்களாக்குகின்றன!
கதை சொல்லாமலே
கடந்து செல்கின்றன சில பக்கங்கள் !
இரவின் வானம்
இட்டு  நிரப்பிய தூரிகைகளாய்
எத்துணை கதாபாத்திரங்கள் !
சில வரிகளின்
உயிர்கள் என்னவோ
சிதைந்த தூரிகைகளில் தஞ்சமடைந்தன
கடைசி பக்கம் .....
நடுப்பக்க நளினமெல்லாம்
நமக்கே மறந்து போகும்
கடைசி பக்கங்கள்
கட்டவிழ்த்துவிடும் கதை வரிகளில் .....
கடைசி பக்கத்தின் கருத்தரிப்பில்
தொலைந்தேபோயின
முதல் பக்கம் சொல்ல வந்த முகவரிகள் !
'முற்றும்'
என்பதை நிரப்பாமலே
கடந்து போகின்றன சில கதை வரிகள்.. இல்லை கதைகள் ..

Wednesday, October 16, 2013

சிற்றாறு

நெத்தியில கை வெச்சு அன்னாந்து பாக்குது ராக்காயி கெழவி. வடக்க இடிஞ்சு விழுந்துரும் கணக்கா தொங்கி நிக்குது கரு கருன்னு மேகம். கருக்கல்ல வயலுக்கு போன கிழவன் இன்னும் வீடு வரல. ஓன்னு மழை பெஞ்சா ஒதுங்க கூட இடம் இல்ல. இளந்தாரி வயசா இது. வாய்க்குள்ள முனுமுனுகுரா  ராக்காயி. இந்த வருஷம் வெல்லாம வந்தா நாயகர் கிட்ட வாங்கின 20000 த என்குடாச்சும் பொரடிரலாம் - இது பொன்னுசாமியின் மன ஓட்டம். நேத்து நடுப்பட்டி போயிருந்தேன் J13 நாத்த வெச்சுக்கிட்டு ஆடுதுரைன்னு அளந்து விட்ராய்ங்க போடா நீயும் உன் நாத்தும்னு சொல்லிட்டு வந்துட்டேன் - இது பெரியமாயி பேசிக்கிட்டு போறது. ஊரே ஒளவும் நடவுமா ஓடிக்கிட்டு கிடக்கு. வடக்க மழை பெஞ்சா சித்தாறு பெருகி கம்மாய்க்கு தண்ணி வரும். போன வருஷம் வந்த தண்ணியே கம்மாயகுள்ள கொஞ்சமதான் வந்துச்சு. கம்மாய்க்கு உள்ள வர மடய்ல கொஞ்சம் மணல் மேடு தட்டிருசுனு ஒசந்த நாயகரு சொல்லிட்டு  போனாரு. வந்த தண்ணியையும் ரெண்டு மடயையும் புடிங்கி விட்டு காலி பன்னிட்டானுங்க கட கோடில நிலம் வெச்சுருகர வேலப்பன் வகையறா. மடைய அடசுருகர மண்ணை PWD ல சொல்லி அல்லிரலாம்னு சொன்னான் நம்ம கந்தபிள்ளை மகன் குமாரு. எத்தனையோ சொல்லியும் இன்னும் ஒரு பிடி மண்ணு கூட அல்ல முடியல. ரெண்டு மழைதண்ணி விழவும் எல்லாத்தையும் மறந்து ஊரு சனமே உலுக ஆரம்பிச்சுருச்சு. "எங்க தாத்தா சடமாய தேவர் காலத்துல ஒரே மட தாம்பா. கெலகால சுடுகாட்டு காட்லெர்ந்து மேக்க பெரிய வாய்கா தாண்டியும் பாயும். 3 மாசம் நிக்கிற தண்ணி இனிக்கு 2 மாத்தில ஓடிருது" இது கிழக்குத் தெரு முருகனின் முனுமுனுப்பு. எப்பா இம்புட்டு பேசுறவன் அந்த வேலப்பன ஓங்கி ஒரு அடி அடிக்க வேண்டியதுதான - பக்கத்துல இருந்த ராமனின் கேள்வி. "அவன்தான் ப்ரெசிடெண்ட் கூட சேந்து ஆடிகிருகானே. அவன குத்திபுட்டு ஜெயிலுக்கு போயிறலாம். ஆனா நம்ம constable ராஜேந்திரனுக்கு பரோட்டா வாங்கி குடுக்க முடியாதுப்பா. எல்லோரும் சிரித்து விட்டு களைவதை தவிர்த்து எதுவும் செய்ய முடியாது. 100 நாள் வேலையில காலாங்கறைய செம்ம பண்ணிட்டாக, கம்மாயக்கு தண்ணி வந்தா தான காலங்கரைக்கு வேல. கிருச கெட்ட பயலுக -  ராக்காயி கொதிக்கும் அளவுக்கு நிலைமை இருந்தது. இது எல்லாம் ஒரு பக்கம். வயல்ல கால் வெக்க டீ, வடை, மக்கியதுகு சோறு கேட்குறாணப்பா, குமுறி கொண்டிருந்தது பொன்னம்மா புருஷன். 100 நாள் வேல வந்தப்புறம் வயிறு வலிக்க  தண்ணி கெடைக்குதே தவிர வயகாட்ல கூலிக்கு ஆள் கிடைக்கலையே - இது ஊரின் பெரிய பட்டாதாரான Minor குருசாமி யின் பொருமல். நெதம் சோறு போடுற பொண்டாடிகும்   என்னைக்காவது சோறு போட்ற வப்பாடிகும் வித்தியாசம் தெரியாம திரியுதே இந்த சனம். இப்படி ஊரே பேசிகொன்டிருக்க, ரா பொழுது கூடியது. தூரத்தில் இடி சத்தமும், மின்னல் வெளிச்சமும் கண்களை குத்தியது. வடக்க நல்ல மழை பெய்யும் என்ற சந்தோஷத்தில் ஊரே உறங்க சென்றது. சிற்றாறு சலசலப்புக்கு தயாரானது. 

Friday, August 30, 2013

கற்றதும் நின்றதும்

Fourier and Laplace series - உசிர குடுத்து படிச்சது இன்னும் கண்ணு முன்னாடி நிக்கிது. ஒரு தடவ கூடு பயன் படுத்தியது கிடையாது. பொறியியல் படிக்கும் காலத்தில் கற்று கொடுக்க பட்ட பவர் சிஸ்டம் தொடர்பான எந்த குறியீடுகளும் இப்போது ஞாபகம் இல்லை. காரணம் அதை பயன்படுத்திய பொழுதுகள் வாழ்கையில் இல்லை. என் பணிக்கு தேவையான படிப்பு எனக்கு வழங்க படவில்லை அல்லது பரவலாக கிடைக்கபெறும் வேலைகளின் நுணுக்கங்கள் பரவலாக கிடைப்பது இல்லை. எப்படி கொண்டாலும் கல்வியின் தரம் உயர்த்தப்படும் அளவிற்கு தேவையான கல்வி வழங்க படுவதில்லை. இந்திய வழிமுறைகளை கற்பிப்பதை விட இங்கே மேற்கத்திய நடைமுறைகளே உன்னதம் என்று உரைக்கபடுகிறது.

Differentiation and Integration (double and Triple) சொல்லிக்குடுத்த ஆசிரியர் அன்று எவ்வளவு உயரத்தில் என் மனதில் இடம் பிடித்தாரோ இப்போது அவர் படு பாதாளத்தில் இப்போது இருக்கிறார்.

வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் குறிபிடுவது போல மரம் நட வேண்டும் என்று சொல்லி குடுக்கும் அதே ஆசிரியர் தான் பூச்சிகொல்லி மற்றும் கலைகொல்லி பற்றிய ரசாயன தாக்கத்தை கற்பிக்கிறார்.

இந்திய பொருளாதார வீழ்ச்சி பற்றி பேசும் நம்மில் பலர் இந்தியாவின் அடிப்படை வாழ்க்கை முறைகளை செய்திதாள்கள் பார்த்தே தெரிந்து கொள்கிறார்கள்

வாழ்க்கையோடு இயைந்த கல்வியை தேடி திரிகிறோம். கற்றது ஓரிடம் நிற்பது ஓரிடம். 

Tuesday, June 11, 2013

இன்னுமா இனிக்கிறது இந்தியா

முகலாயர் முதல் முதலாளிகள் வரை 
முகர்ந்து பார்த்தும் நகர வில்லை 
சனங்கள் கூடும் இடமெல்லாம் சாராய கடைகள்
ஊற்றெடுக்கும் பெருமைகலாய்  ஊழல் கதைகள் 
அரசர்களை ஒழித்துவிட்டு அரசாங்கங்களை ஒளித்துவைத்தோம் 
இளங்கோ சொன்ன கூற்றெல்லாம் இளவல்கள் அறிவதில்லை 
(இருவர்) கூடி பேசும் விஷயமெல்லாம் கூத்தாடிகள் பற்றி தான் 
அரியணை ஏற கூட அரிதாரம் பூசுபவன் வேண்டும் 
IPL  தொடரை கூட ஆடுபவன் நிர்ணயிப்பது இல்லை 
ஆனந்த விகடன் கூட எட்டாக்கனி தான் ஏழைகளுக்கு 
மனிதம் புதைத்த இடத்தில் REAL ESTATE கொண்டாட்டங்கள் 
இன்னும் இனிக்கிறது இந்தியா 
கடல் கடந்தும் கரை கடந்தும் இங்கே களவு பயில வருவரோ 
இன்னுமா இனிக்கிறது இந்தியா 

Saturday, December 15, 2012

சில்லரை வர்த்தகம்


அண்ணாச்சி கடைகளெல்லாம் அலுத்துவிட்டது
நான் கேட்டது மட்டுமே கொடுக்கிறார்
அவர் கொடுத்தது மட்டுமே பெறுகிறேன்
பச்சையும் மஞ்சளும் கலந்த மிட்டாய் பக்கத்து வீட்டு பையன் சாப்பிட்டது
என் தெரு கடையில் கிடைகல
வாங்குகின்ற அரிசியில் வகை வகைவகையாய் வண்டுகள்
வாய் நிறைய சொல்லுகிறார் காரணங்கள்
நிர்ணய விலையில் எந்த குறைவும் கொடுப்பது இல்லை
வருடத்திற்கு ஒரு முறை நாள்காட்டி கொடுப்பதோடு முடிகிறது
அவரது வியாபார யுக்திகள்
அவருக்கும் எனக்குமான பந்தங்கள் இதோடு முடிவதில்லை
என் அண்டைவீட்டார், மகனோடு படிக்கிறான் அவர் மகன், என் வீட்டு நல்லது கெட்டதில் பங்கெடுக்கிறார்
எனக்கு தேவையானது மட்டுமே விற்கிறார் இப்படியாக நீள்கிறது
என் மண்ணில் விளைந்ததை விற்கிறார், வேலை கேட்டு சோம்பல் விடுவதில்லை, இலவசம் கேட்டு போராடுவதில்லை
நாட்டின் பொருளாதாரத்தில் மறுக்க முடியா அங்கமென நீள்கிறது அவருக்கும் இந்த நாட்டிற்குமான தொடர்பு
இவரை எங்களுக்கு அந்நியப்படுத்த ஆயத்தமாகிறது அரசு
வால்மார்ட்டில் எல்லாம் கிடைக்குமாம் , அடிமைகளும் கிடைப்பார்களாம் ...........

Friday, August 5, 2011

சுஜாதாவின் ஸ்ரீரங்கத்து தேவதைகள்

வெகு நாட்களுக்கு பிறகு ஒரு நல்ல புத்தகத்தின் ஒரு பாகம் படித்த நிறைவு. என் நண்பன் ஸ்ரீநிக்கு தான் நன்றி சொல்ல வேண்டும் என்னோடு பகிர்ந்து கொண்டதற்கு.

சுஜாதாவின் நடைகளில் ஒரு 'FICTION' இல்லாத படைப்பு. ரங்கா கடை தொடங்கி, கே வி குறும்புகள் வரை, எத்தனை மனிதர்கள்!!! கைகிளை இலக்கணம் வகுத்த கோபால்தாஸ், வீரசிம்மன் நாடகம், சைக்கிள் பழகியது, பத்தணா அய்யங்கார், பாம்பு அடித்தது, கிரிக்கெட் விளையாட்டு .....இன்னும் பேசலாம். நடைகளில் சுஜாதா நிழலாடுகிறார். எவ்வளவு கவிதை தனமாய் இருந்திருகிறது வாழ்கை. இதோ பணத்தின் பின்னால் ஓடி கொண்டிருக்கிறோம். அடுத்த தலை முறைக்கு என்ன கொண்டு செல்லபோகிறோம்.

ஒரு நல்ல எழுத்தாளர் மட்டும் அல்ல ஒரு நல்ல வாழ்கையும் இழந்து விட்டோம்.

சிரிப்பு

காலணா செலவு இல்லை கடை வீதியில் கிடைப்பதில்லை ! உலகத்து உயிர்களிலே ஒரே ஒரு மிருகம் கற்ற வித்தை ! உயிர் இலா ஊணிலே ஒளிந்து கூட இருப்பதில...