Wednesday, March 31, 2010

காலப் பிழைகள்

சமீபத்தில் நான் ஆயிரத்தில் ஒருவன் என்ற தமிழ் படம் பார்க்க நேர்ந்தது. அதன் காட்சிகளும் , வசனங்களும் சற்றே பார்க்கும் படியாக இருந்தாலும் ஏதோ ஒன்று என் அடி மனதை உறுத்திக் கொண்டே இருந்தது .எங்கோ ஒரு இடத்தில இயக்குனர் சொல்ல வந்ததை சுவைபட சொல்லுவதாய் எண்ணி வரலாறை மறந்து விட்டார் என்றே தோன்றுகிறது. ஆங்கில படத்தின் தாக்கம் அதிகம் இருக்க வேண்டும் என்று எண்ணியவர் தமிழ் மரபை மறந்தது வெட்ககேடானது.அந்த படத்திலே பார்த்த ரசித்த சில பிழைகள் இதோ

(௧) சோழர்கள் கருப்பாக அதுவும் அடை கரியாக இருப்பார்கள் என்பது அதீத கற்பனை என்றே சொல்லலாம். இன்றைய தலைமுறையை விட சற்றே கருப்பாக இருக்கலாமே தவிற இவ்வளவு கேவலமாக சித்தரிக்க தேவை இல்லை.

(௨) சோழ அரசன் ஒருவன் பாதுகாக்க பட்டான் என்ற செய்தியை அறிந்த இயக்குனர் அவன் பற்றிய முழு செய்தியையும் படிக்காதது வெட்கம். பாதுகாக்கப்பட்ட சோழன் இலங்கையில் இருந்தான் என்றும் பிற்காலத்தில் சோழ சாம்ராஜ்யத்திற்கு வாரிசு இல்லாத குறை எழுந்த போது அவன் வரவழைக்க பட்டான் என்பதும் வரலாறு. ஆனால் அவன் படத்தில் வருவது போல் ஏதோ ஒரு தீவில் அரசாட்சி செய்யவில்லை. அதுவும் காடு வாசிகளுக்கு.

(௩) சோழன் எப்பொழுதும் பரத்தையருடன் கூடி களித்தான் என்பது இன்னொரு அபத்தம். தமிழில் மன்னர்கள் அந்தபுரம் வைத்திருந்தார்கள் என்பதும் அவர்களுக்கு ஆசை நாயகிகள் அதிகம் பேர் இருந்தார்கள் என்பதும் வரலாற்று உண்மைகள். ஆனால் அவன் எப்பொழுதும் இதே வேலையாக இருக்கவில்லை. இவர்கள் பார்த்த ஆங்கில படங்களிலோ அல்லது வட நாட்டு ராஜபுத்திர அரசர்களோ, இசுலாமிய மற்றும் முகமதிய அரசர்களோ இப்படி இருந்தார்கள் என்பதற்கு சான்றுகள் இருக்கின்றன.

(௪) பின்னர் வர போகின்ற நிகழ்வுகளை முன்னமேயே வரைந்து வைப்பது என்பது "பார்த்திபன் கனவு " புத்தகத்தை பாதி படித்திருக்கிறார் இயக்குனர் என்பதை காட்டுகிறது. நிகழ்ந்த நிகழ்வுகளை சித்திரமாக பதிவது பல்லவர்கள் வழக்கே ஒழிய அவை சோழ சமாச்சாரங்கள் இல்லை.

(௫) போர் புரிவதிலேயும், கவன் எறிவது என்பது கோட்டையை நோக்கி வருகின்ற படைகளின் மீதே நிகழ்த்தப்படும் ஒரு போர் முறையே தவிற மலை உச்சியில் இருந்து கவன எறிவது கேலி கூத்து.

(௬) அடிமைகளுள் போர் மூட்டி பார்ப்பது "GLADIATOR" படத்தின் தாக்கமாக இருக்கலாம் ஆனால் தமிழ் மன்னர்களின் முறை இல்லை என்பதே வரலாறு.

(௭) பாண்டியர்களுக்கு மீன் முகம் கொண்ட குல தெய்வம் இருந்தது இன்னொரு கேலி கூத்து. பாண்டிய வம்சதவருக்கு குல தெய்வ சிலைகள் என்பது எதுவும் இல்லை என்பது வரலாற்று உண்மை.

(௯) ரத்த பலி கொடுப்பதும் பூஜைகளில் நம்பிக்கை வைத்து அரசியல் முடிவுகள் எடுப்பதும் காபாலிகர்கள் காலத்தில் தான் தமிழ்நாட்டில் ஊடுருவியது என்பதும் உண்மை. இதில் சோழர்கள் சேர்ந்தது பற்றி தெரியவில்லை.

(௧௦) இவற்றிக்கு மகுடம் வைத்தார் போல் இயக்குனர் இதை ஒரு வரலாற்று படமாக எடுக்க வில்லை என்று கூறி இருப்பது இன்னொரு கேலி கூத்து. அப்படியானால் அவர் சோழர்களையும் பாண்டியர்களையும் வம்பிழுக்காமல் இருந்திருக்கலாம்.

எதிர் காலத்தில் இந்த திரைபடத்தை பார்த்து தமிழ் அரசர்களை பற்றி தவறான முடிவிற்கு வருகின்ற பட்சத்தில் இப்படம் ஒரு கால பிழைதான்.

4 comments:

  1. If I remember correctly, the Chozha heir was travelling in a ship and during that time in Tamizh nadu there was some political chaos and there was no leader ship. This ship came to shore somewhere near the shores of Chennai to Kancheepuram and this created the Pallava Dynasty. Probably this is being reffered here in a different manner

    And one more thing in the history of Tamizh kings, nobody has destroyed the temples or deity, as far as I know.

    ReplyDelete
  2. yes sutharsan u r correct. in Tamil wars only "AAnirai kavarthal" was there.That is stealing the cows of the defeated country and not the idols in any situation.As you said the Pallava dynasty was formed by that Chola king who was sent in boat.Nice.

    ReplyDelete
  3. see Rajesh, the director says that there is nothing related to history in this story and all are his imagination. Also he shows this before the title card, so why should we demotivate and discourage a bold and good attempt in Thamizh cinema?

    ReplyDelete
  4. in the novels written by kalki and ko.vi.manisekaran lot of imaginations are there.but no imagination should go beyond the life of tamil kings once u say it is pandya and chola.Tamilan kuru vaal eduthu sanda potanu solla mudiyuma. kuru vaal Gooka voda adaiyalam.Imagination should not ill teach our culture

    ReplyDelete

சிரிப்பு

காலணா செலவு இல்லை கடை வீதியில் கிடைப்பதில்லை ! உலகத்து உயிர்களிலே ஒரே ஒரு மிருகம் கற்ற வித்தை ! உயிர் இலா ஊணிலே ஒளிந்து கூட இருப்பதில...