Tuesday, October 12, 2010

உயிரின் விளக்கம்

உயிரே நினது பெருமை யாருக்குத் தெரியும்? நீ கண்கண்ட தெய்வம். எல்லா விதிகளும் நின்னால் அமைவன. எல்லா விதிகளும் நின்னால் அழிவன. உயிரே, நீ காற்று, நீ தீ, நீ நிலம், நீ நீர், வானம். தோன்றும் பொருள்களின் தோற்ற நெறி நீ. மாறுவனவற்றை மாற்றுவிப்பது நின் தொழில். பறக்கின்ற பூச்சி, கொல்லுகின்ற புலி, ஊர்கின்ற புழு, இந்தப் பூமியிலுள்ள எண்ணற்ற உயிர்கள், எண்ணற்ற உலகங்களிலுள்ள எண்ணேயில்லாத உயிர்த்தொகைகள் - இவையெல்லாம் நினது விளக்கம் - பாரதி

உயிர் வலி பெரிது ; உயிர் நிலை பெரிது ;
உரக்கச் சொல்லுவோம் உலகுக்கு;
உலகின் விதி அனைத்தும் உருவாகுவதும் உருக்குலைவதும்
உயிரின் உருவகங்களே;
ஐம் பூதமும் அவற்றின்
தோற்ற நிலைகளும் தொடர் தோன்றல்களும்;
உருமாறும் உருவங்களின் உருவகங்களும் ;
பார் தனிலே பார்க்கின்ற யாவும்;
காற்றிலே கலந்திருக்கும் எண்ணற்ற எவையும்;
உயிரே உன் விளக்கங்கள்;
உயிர் நிலை பெரிது; உயிர் வலி பெரிது.

சிரிப்பு

காலணா செலவு இல்லை கடை வீதியில் கிடைப்பதில்லை ! உலகத்து உயிர்களிலே ஒரே ஒரு மிருகம் கற்ற வித்தை ! உயிர் இலா ஊணிலே ஒளிந்து கூட இருப்பதில...