Monday, March 16, 2009

வாழ்விழந்த வாழ்க்கை

காடுகள் எல்லாம்
கடலில் சேர்த்து
மனிதன் காலடி
காட்டிய கிராமத்துக்காரன் பேசுகிறேன்
அந்நியன் அட்சியில்
கூடஅரிசிக்கு வந்ததில்லை
அவல நிலை
காய்கறி விற்பதற்கு
கற்று கொடுக்கிறான் ஒருவன்
காய்ந்து போன
காட்டிற்கு வழி கேட்கிறோம் நாங்கள்
வாய்கால் பார்த்த நாங்கள்வடிகால்
தேடுகிறோம்எங்கள் இனமெல்லாம்
ஏற்றுமதி ஆனது நகரத்திற்கு
நகரத்தின் நாகரிகம் நடப்பட்டது
எங்கள் தோட்டங்களில்
கிராமத்தின் அழகே
கிறங்கிகிடக்கும் இயற்கை தான்இழுத்து
சென்று விடாதிர்கள்வரமாட்டால்
அவள் தமிழ் பெண்

No comments:

Post a Comment

சிரிப்பு

காலணா செலவு இல்லை கடை வீதியில் கிடைப்பதில்லை ! உலகத்து உயிர்களிலே ஒரே ஒரு மிருகம் கற்ற வித்தை ! உயிர் இலா ஊணிலே ஒளிந்து கூட இருப்பதில...